உலகம் முழுவதும் பணிபுரியும் ஊழியர்களில் 78 சதவீதம் பேர் வேலையைவிட குடும்பத்துடன் நேரம் செலவிடவே அதிகம் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐந்தில் 4 பேர், குழந்தைகள், பெற்றோர், வாழ்க்கைத் துணை ஆகியோருடன் நேரம் செலவிட விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 90 மணிநேரத்திற்கு மேல் பணிபுரிய வேண்டும் என L&T தலைவர் சுப்பிரமணியனும், 70 மணிநேரத்திற்கு மேல் பணியாற்ற வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.