ரஷ்யாவின் குரில் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிறுவனம், ரஷ்யாவின் குரில் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 7.5ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதா என்ற விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.