அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 6 போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரில் உள்ள நைஸ்டவுண் நகரில் போதைபொருள் கடத்தல் தொடர்பான விசார ணைக்காக, ஒருவரது வீட்டுக்கு 6 போலீசார் சென்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த சிலர் போலீஸ்காரர்கள் மீது சரமாரி யாகச் சுட்டனர். பின்னர் போலீஸ்காரர்களும் பதிலுக்குச் சுட்டனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்பானது. குற்றவாளிகள் பின் பக்க ஜன்னல் வழியாக தப்பிச் சென்றதாகவும் சிலர் அதில் காயமடைந்ததாகவும் ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் தப்பிய தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென்று போலீஸ்காரர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்தது. சினிமாவில் வருவது போல குண்டுகள் பாய்ந்தன. சுமார் நான்கு மணிநேரம் நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் சில போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.