உலகம்

ஒரு மணி நேரத்தில் 2,682 புஷ் அப்ஸ்... 52 வயது இளைஞர் உலகச்சாதனை

ஒரு மணி நேரத்தில் 2,682 புஷ் அப்ஸ்... 52 வயது இளைஞர் உலகச்சாதனை

webteam

ஒரு மணி நேரத்தில் 2,682 புஷ் அப்ஸ் எனப்படும் தண்டால் எடுத்து 52 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கார்ல்டன் வில்லியம்ஸ் உலகச் சாதனை படைத்துள்ளார். 

ஒரு மணி நேரத்தில் 2,220 புஷ் அப்ஸ் எடுத்து கடந்த 2015ம் ஆண்டில் சாதித்த வில்லியம்ஸ், தற்போது 2,682 புஷ் அப்ஸ் எடுத்து சொந்த சாதனையை முறியடித்துள்ளார். வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பகுதியைச் சேர்ந்த அவர், கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். கின்னஸ் உலகச் சாதனை அமைப்பின் விதிமுறைப்படி, ஒரு மணி நேரத்தில் எந்தவொரு இடைவேளையும் அவருக்கு அளிக்கப்படவில்லை. மேலும், ஒவ்வொரு புஷ் அப்பின் போதும் அவரது முகம் தரையிலிருந்து 90 டிகிரி கோணத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யும் புஷ் அப்கள் மற்றுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கின்னஸ் அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வில்லியம்ஸின் உலகச் சாதனை நிகழ்வு யூடியூபில் ஒரு மணி நேர வீடியோவாக கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால் பதிவிடப்பட்டுள்ளது.