diamond merchant Ramani x page
உலகம்

மேற்கு ஆப்ரிக்கா | இந்திய வைர வியாபாரி கடத்தல்.. கும்பலுக்கு 44 கோடி ரூபாய் கொடுத்து மீட்ட கதை!

கடத்தல்காரர்கள் ஆரம்பத்தில் ரமணியை விடுவிக்க சுமார் 100 கோடி ரூபாயைக் கேட்டுள்ளனர்; ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி அந்தத் தொகையைக் குறைத்த பின்னரே அவரை விடுவிக்க முடிந்தது.

PT WEB

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்கச் சுரங்கம் வாங்கி வசித்த இந்திய வம்சாவளி வைர வியாபாரியான ரமணி, கடத்தப்பட்டார். ஆரம்பத்தில் ரூ.100 கோடி கோரிய கடத்தல்காரர்களுடன், அமெரிக்காவில் உள்ள அவரது குடும்பம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ரூ.44 கோடி (4 மில்லியன் யூரோ) மீட்புத் தொகை செலுத்தி கடந்த வாரம் அவரை விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர்; M.மீரா

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், அவரது குடும்பத்தினர் 4 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 44 கோடி) அளவுக்குப் பெருந்தொகையை மீட்புப் பணமாகச் செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆபிரிக்க நாட்டில் கடந்த வாரம் அவரை விடுவிக்க குடும்பம் யூரோ 4 மில்லியன் (சுமார் ரூ. 44 கோடி) செலுத்தியதாக சூரத்தை தளமாகக் கொண்ட ஆதாரம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரமணி, 1980-களிலிருந்தே வைரத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பின்னர் அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்; அங்கு அவரும் அவரது குடும்பத்தினரும் சர்வதேச வைர வர்த்தகம் செய்து வருகின்றனர்.

diamond merchant Ramani'

PTI செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சமீபத்தில் மாலியில் ஒரு தங்கச் சுரங்கத்தை வாங்கி அங்கு வசித்து வரும் ரமணி, கடந்த ஏப்ரல் மாதம் மாலியில் கடத்தப்பட்டிருக்கிறார். கடத்தல்காரர்கள் ஆரம்பத்தில் ரமணியை விடுவிக்க சுமார் ரூ. 100 கோடி கேட்டதாகவும் அமெரிக்காவில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி அத்தொகையைக் குறைத்து, 44 கோடி கொடுத்து அவரை விடுவித்துள்ளனர். மேலும் அவரை விடுவிக்க அவரது உறவினர்கள் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அரசு ஈடுபடவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஏப்ரல் மாதத்தில் கடத்தல் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில், மாலியின் தலைநகரான பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், அங்கு வசிக்கும் இந்தியக் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுவான பாதுகாப்பு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இருப்பினும், அந்த அறிவுறுத்தலில் குறிப்பிட்ட எந்தவொரு சம்பவமோ அல்லது தனிநபரோ பற்றி குறிப்பிடப்படவில்லை.