கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் 439 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு சான்டியாகோ பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பி்ல் எரியத் தொடங்கிய காட்டுத்தீ, அடுத்த சில மணி நேரங்களில் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்குப் பரவியது. இதனால், வானில் கடும் புகை மூட்டம் எழுந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட வெப்பத்தால், பல வீடுகளில் இருந்த எரிபொருள் தொட்டிகள் வெடித்துச் சிதறின. ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரைக் கொட்டி தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 439 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து போனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் தீ விபத்தால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் இங்கு ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் 8 நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.