உலகம்

கலிஃபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் மரணம் -  ‘ஹலோவீன் விருந்து’ விபரீதம்

webteam

கலிஃபோரினாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் இறந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

அக்டோபர் 31 தேதியில் ‘ஹலோவீன் விருந்து’ விழாவாக உலகம் முழுக்க பலர் கொண்டாடி வருகின்றனர். இந்த நாள் இரவில் ‘ஆவி’யை போல உடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். சென்னை போன்ற நகரங்களில் கூட இந்த இரவு விழா நடை பெறுவது உண்டு. நேற்று அக்டோபர் 31 இரவு என்பதால் கலிஃபோர்னியா அருகே உள்ள ஒரிண்டா பகுதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் சிலர் குழுமி உள்ளனர். 

இந்த வீடு சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வடகிழக்கு பகுதியில் பயணித்தால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்தச் சந்திப்பின் போது யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். அந்தத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அந்தப் பகுதியில் இயங்கி வரும் என்பிசி செய்தி நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது.

இதனிடையே லாஸ் ஏஞ்சல் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த ‘ஹலோவீன்’ விருந்தின் போது 3 பேர் கொல்லப்பட்டதாகவும் 9 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.