எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொலைந்து போன தங்க நகரத்தை கண்டறிந்துள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இது துட்டன்காமனின் கல்லறைக்கு அடுத்த படியாக இந்த நகரம் மிக முக்கியமான கண்டெடுப்பு என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எகிப்திற்கு அருகில் உள்ள லக்சர் என்ற பகுதியில் இந்த தங்க நகரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மண்-செங்கல் வீடுகள், கலைப்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு முழுமையான ஒரு நகரம் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதையல் தேசமான எகிப்தில் தோண்ட தோண்ட பழமை மிக்க பொருட்கள் கிடைப்பது வழக்கம். இப்போது ஒரு நகரமே கிடைத்துள்ளது.