அமேசான்
அமேசான் ட்விட்டர்
உலகம்

பள்ளத்தாக்கில் ஓர் புதையல்.. அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான நகரம்!

Prakash J

அமேசான் காடுகளில் 3,000 ஆண்டுகள் பழைமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரம் ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி எரிமலையின் நிழலில் உள்ளது. இது வளமான விவசாய மண்ணைக் கொண்டுள்ளது. உபனோ பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட இந்த நகரத்தில், பல சாலைகள் மற்றும் கால்வாய்கள் இருப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது. தொலைநிலை உணர்திறன் முறை LiDAR மூலம் இந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது லேசர் ஸ்கேனிங் என்றும் அழைக்கப்படுகிறது. இது அமேசான் பகுதியில் காணப்படும் பழமையான நகரம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நகரத்தைப் பற்றி மேலும் படித்தால், அக்கால நாகரிகம் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இது அமேசான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான நகரம். இதுவரை அமேசான் நாகரிகம் பற்றி நாம் அறிந்தவை அனைத்தும் மேலோட்டமானவை. ஆனால், இந்த நகரத்தைப் படித்தால் நாகரிகம் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். நீங்கள் அமேசான் காடுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அப்போது அனைத்து மக்களும் சாதாரண உடை அணிந்திருந்தனர். அது இல்லாமலும் வாழ்ந்துள்ளனர். சிறிய குடிசைகளில் தலையை மறைத்துக்கொண்டனர். ஆனால், இந்த நகரத்தைப் பார்க்கும்போது அவர்களின் வாழ்க்கை முறை மாறியிருப்பது தெரிகிறது” என தேசிய மையத்தின் விசாரணை இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் ரோஸ்டைன் இவ்வாராய்ச்சி குறித்து பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காதலில் விழுந்த புருனே இளவரசர்.. மன்னர் வம்சாவளி அல்லாத பெண்ணை கரம் பிடித்து ஒரேநாளில் வைரல்!

இந்த நகரம் 3,000 முதல் 1,500 ஆண்டுகள் பழைமையானது. அமேசானில் கண்டுபிடிக்கப்பட்ட பிற கொலம்பியனுக்கு முந்தையதைவிட பழமையானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த ஆய்வுகள் 2015இல் மேற்கொள்ளப்பட்டாலும், முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 6,000க்கும் மேற்பட்ட உயர்த்தில் மண்மேடைகளும், மரத்தாலான கட்டடங்களும் ஒருகாலத்தில் இருந்ததாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் ஐந்து பெரிய குடியிருப்புகள் இருப்பதாகவும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. மேலும், அங்குள்ள மிக நீளமான சாலை ஒன்று குறைந்தது 25 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதிலிருந்து விலக்கு!