உலகம்

கன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞர் - மீண்டும் வாழ்வளித்த மருத்துவர்கள்

கன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞர் - மீண்டும் வாழ்வளித்த மருத்துவர்கள்

webteam

2 ஆண்டுகளுக்கு முன்னர் துப்பாக்கியால் கண்ணத்தில் சுட்டுக்கொண்ட இளைஞருக்கு புதிய முகத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படத்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கேமரான். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை மறக்க முடியாமல் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவெடுத்தார். இதற்காக அவர் துப்பாக்கியால் தனது கன்னத்தில் சுட்டுக்கொண்டார்.

துப்பாக்கி குண்டு அவரது தாடை, பற்கள், மூக்கு ஆகியவற்றை முற்றிலும் சிதைத்தது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் உயிர் காப்பாற்றப்பட்டாலும், அவரது முகம் முற்றிலும் சிதைந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் ப்ளாஸ்டிக் சர்ஜரி சிறப்பு மருத்துவர்களின் உதவியை கேமரான் நாடினார். அப்போது ப்ளாஸ்டிக் சர்ஜரி ஸ்பெஷல் மருத்துவரான எட்வொர்டோ ரோட்ரிக்யூஸ், கேமரானும் புதிய நம்பிக்கை அளித்தார்.

ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் முற்றிலும் புதிய முகத்தை, பழைய முகத்தின் சாடையிலேயே கேமரானுக்கு ஏற்படுத்துவத்துவதாக தெரிவித்தார். கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் கேமரானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 100 மருத்துவர்கள் தொடர்ந்து 25 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். முகம் அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து 11 மாதங்கள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் கேமரான் இருந்தார். அவரது அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அவரது முகம், சீரற்று காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவரின் முகம் முற்றிலும் புதுப்பொலிவுடன் மாறிவிட்டது. கேமரான் கூறும் போது, “என்னால் இப்போது சிரிக்க முடிகிறது. பேச முடிகிறது. கடினமான உணவுகளையும் சாப்பிட முடிகிறது” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

11 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருந்த முகத்திற்கும், இப்போது இருக்கும் முகத்திற்குமான மாற்றங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.