உலகம்

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு மூலம் தீவிரவாத தாக்குதல்: 26பாதுகாப்பு அதிகாரிகள் மரணம்

EllusamyKarthik

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அங்குள்ள காசுனி நகரில் இன்று கார் குண்டு மூலம் தலிபான் படையினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டின் இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். 

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் மற்றும் உள்நாட்டு ரானுவத்திற்கு இடையே நடந்து வரும் போரில் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதால், அண்மையில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்திருந்தது. 

கடந்த சில மாதங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மிக கொடூரமான தாக்குதல் இதுதான் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாமியன் நகரில் நடந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தலைநகர் காபூலில் மட்டும் கடந்த சில வாரங்களில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க இராணுவம் தனது 2000 படை வீரர்களை பின்வாங்கி கொள்வதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்திருந்தது.