உலகம்

மாரத்தான் போட்டி : ரோட்டின் குறுக்கே புகுந்து ஓடிய 258 பேர் நீக்கம்

மாரத்தான் போட்டி : ரோட்டின் குறுக்கே புகுந்து ஓடிய 258 பேர் நீக்கம்

webteam

மாரத்தான் போட்டியில் சாலையின் குறுக்கே புகுந்து ஓடி மோசடியில் ஈடுபட்ட 258 பேர் தகுநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் சென்ஸென் பகுதியில் மாசுபாடு விழிப்புணர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக மாராத்தன் போட்டி நடைபெற்றது. 21 கி.மீ தொலைவிற்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்ற 258 பேர் மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாரத்தான் போட்டியை நடத்திய நிறுவனம் கூறும்போது, போட்டியில் ஈடுபட்டவர்களில் 18 பேர் போலியான எண்கள் பதியப்பட்ட ஆடைகளை அணிந்துக்கொண்டு ஓடியுள்ளனர். 3 பேர் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பதிலாக இடையில் ஆடையை மாற்றிக்கொண்டு ஓடியது தெரியுள்ளது. அத்துடன் 237 பேர் சாலை இடையே உள்ள மரங்கள் மற்றும் புதர்களின் இடையே புகுந்து குறுக்கு வழியில் ஓடியுள்ளனர். 

இது மாரத்தான் போட்டியை களங்கப்படுத்திய செயலாக அமைந்துள்ளது. இவ்வாறு போட்டி நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்றவர்கள் மோசடியில் ஈடுபட்ட சம்பவம், சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சமூக விழிப்புணர்வு கருதி நடத்தப்பட்ட ஒரு போட்டியில் நூற்றுக்கணக்கானோர் மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.