உலகம்

ஆப்கானிஸ்தானில் 235 பிணைக் கைதிகள் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானில் 235 பிணைக் கைதிகள் விடுவிப்பு

Rasus

ஆப்கானிஸ்தானின் சர்-இ புல் மாகாணத்தில் பிடித்து வைத்திருந்த‌ 235 பிணைக் கைதிகளை தலிபான் பயங்கரவாதிகள் விடுவித்துள்ளனர்.

மிர்ஷாவாலங் பகுதியில் கடந்த வாரம் பயங்கரவாதிக‌ள் கடும் தாக்குதல் நடத்தினர். முதலில் அப்‌பகுதியில் உள்ள காவல் துறை சோதனைச்சாவடியை தாக்கிய தீவிரவாதிகள் அதனையடுத்து அங்குள்ள கிராமத்தில் புகுந்து ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலுக்கு பின் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகளில் 235 பேரை தற்போது பயங்கரவாதிகள் விடுவித்துள்ளனர். இதனிடையே அவர்களின் கட்டுப்பாட்டில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.