உலகம்

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்கள் விடுதலை

kaleelrahman

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நள்ளிரவு இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள், இலங்கை காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமில் தனிமை படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் கடந்த அக். 28ஆம் தேதியோடு முடிவடைந்ததை அடுத்து அன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப் பட்டனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் 23 பேரையும் நவம்பர் 11ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து இரண்டாவது முறையாக நீதியரசர் முன்பாக தமிழக மீனவர் 23 பேரையும் நேரடியாக ஆஜர்படுத்தினர். இதையடுத்து 23 தமிழக மீனவர்களையும் 15.11.21 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீட்டிக்கப்பட்ட காவல் இன்று முடிவடைந்த நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

இதையடுத்து தமிழக மீனவர்கள் 23 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் அவதாரமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.