உலகம்

Porn படங்களை ஆராய பெண் நியமனம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

JananiGovindhan

ஆபாச படங்களை பார்த்து ஆராய்ச்சி செய்வதற்காக 22 வயது பெண் ஒருவரை பணியமர்த்திருக்கிறது Bedbible என்ற இணையதள நிறுவனம்.

Porn துறையில் சிறந்த நுண்ணறிவை பெறுவதற்கான ஆராய்ச்சியை தொடங்குவதற்கான நெறிமுறை தளமாக இயங்கிக் கொண்டிருக்கும் Bedbible.com, ஸ்காட்லாந்தின் க்ரீனாக்கைச் சேர்ந்த ரெபெக்கா டிக்சன் என்ற 22 வயது பெண் ஒருவரை பார்ன் ஆராய்ச்சியாராக நியமித்துள்ளது.

இந்த வேலைக்காக 90 ஆயிரம் பேர் விண்ணப்பத்ததில் ரெபேக்கா டிக்சன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக ரெபெக்காவிற்கு ஒரு மணிநேரத்திற்கு 20 டாலர் அதாவது 1500 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.

பாலின நிலைகள், காலம், உச்சக்கட்டத்தின் எண்ணிக்கை, ஆண் மற்றும் பெண் விகிதம், முடி நிறம் விநியோகம் மற்றும் மொழி விநியோகம் போன்றவற்றை குறித்த தகவல்களை சேகரிப்பதுதான் இந்த பார்ன் ஆராய்ச்சியாளரின் பணி என பெட்பைபிள் கூறியுள்ளது.

இந்த வேலை தொடர்பாக பேசியுள்ள ரெபெக்கா டிக்சன், “ஆபாச படத்தை பார்ப்பதற்கு பணம் கொடுப்பதாக சொன்னால் யார்தான் பார்க்காமல் இருப்பார்கள்? இது சிறந்த வேலையாக இருக்கும் என நினைத்தேன். இந்த வேலைக்காக நான் தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆபாசம் என களங்கப்படுத்தப்பட்ட ஒரு விஷயத்தை ஆராய்வது எனக்கு கவர்ச்சிகரமானதாகவும், வித்தியாசமானதாகவும் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் குறைந்தபட்ச சம்பளம் வாங்குவோரை விட ரெபெக்கா டிக்சன் மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார் என நியூயார்க் போஸ்ட் கூறியுள்ளது. மேலும் ரெபெக்காவின் முதல் வேலையாக porn hub-ல் அதிகபடியாக பார்க்கப்பட்ட 100 வீடியோக்களை பார்த்து அதில் உள்ள கால அளவு மற்றும் உடல் உறவு கொள்ளும் நிலைகளை குறித்து வைப்பதாக இருந்திருக்கிறது எனவும் நியூயார்க் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

ALSO READ: