கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக மக்களின் உயிர்களை பறித்தது. பல லட்சம் மக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்காணோர் சிகிச்சைப் பின் குணமடைந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடங்கியுள்ள நிலையில், வரும் ஆண்டில் மலேரியா, எச்ஐவி, காசநோய் ஆகியவற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த மூன்று நோய்களால், ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் மக்கள் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, பறவைக் காய்ச்சல் நோயின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளை முதலில் பாதிக்கும் இந்த வகை நோய், தொடர்ந்து மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய்களின் தன்மையை அறிந்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், நோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.