வேதியியல் நோபல் பரிசு
வேதியியல் நோபல் பரிசு pt web
உலகம்

”எங்களை மன்னிச்சிடுங்க..” - வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பில் நடந்த தவறு!

Angeshwar G

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் தலைச்சிறந்து விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மருத்துவம், இயற்பியல் துறைகளை தொடர்ந்து இந்த ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் பொதுச்செயலாளர் ஹான்ஸ் எலெக்ரென், நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஊடகங்களுக்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும் அது குறித்து மன்னிப்பு கேட்பதாகவும் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பவெண்டி, “நோபல் கமிட்டியின் அழைப்பிற்கு முன் இச்செய்தியை வேறு எங்கும் கேட்கவில்லை; அதுவரை நான் தூங்கிக் கொண்டிருந்தேன்” என தெரிவித்துள்ளார்.

குவாண்டம் டாட்ஸ் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதற்காக, மெளங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எக்கிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு, நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இலக்கியத்திற்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.