காஸா
காஸா File image
உலகம்

காஸாவிற்குள் ஒரே நாளில் 20,000 கேலன்கள் எரிபொருள்!

PT WEB

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, காஸாவில் நடைபெற்று வரும் தாக்குதல் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பேசுகையில், "ஒரே நாளில் 20,000
கேலன்கள் அதாவது 76,000 லிட்டர் எரிபொருள் காஸாவிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி

எரிபொருள் பற்றாக்குறை அதிகளவில் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 76,000 லிட்டர் எரிபொருள் அரசு சாரா அமைப்புகள் வழியாக அங்குள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளின் மின்தேவையை பூர்த்தி செய்ய முன்னுரிமை வழங்கப்படும்.

24 மணி நேரத்தில் காசாவிற்குள் 50 லாரிகளில் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளது. பிணைக்கைதிகள் மீண்டும் இஸ்ரேல் திரும்ப பாதுகாப்பான வழியை உருவாக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தினார்.