உலகம்

ஆப்கானை கைப்பற்றி வரும் தலிபான்கள் - அமெரிக்கா குண்டுவீச்சில் 200 பேர் பலி?

ஆப்கானை கைப்பற்றி வரும் தலிபான்கள் - அமெரிக்கா குண்டுவீச்சில் 200 பேர் பலி?

PT WEB

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க விமானப் படை விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 200க்கும் அதிகமான தலிபான்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் விரைவில் தாயகம் திரும்ப உள்ள நிலையில், தலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. தற்போது, 3 மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதில் ஷெபர்கன் நகரை மீட்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிநவீன B - 52 ரக விமானங்கள் ஷெபர்கன் என்ற நகரத்தில் நடத்திய இத்தாக்குதலில் தலிபான்கள் தரப்பில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபவாத் அமன் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் நடத்தி வரும் தாக்குதலால் ஆப்கானிஸ்தான் பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்த மறுநாளே இந்த அதிரடி தாக்குதலை அந்நாட்டு விமானங்கள் நடத்தியுள்ளன. மேலும் தலைநகர் காபுல் பகுதியில் தலிபான்கள் நுழைந்துவிடாத வகையில் அமெரிக்க போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.