உலகம்

பீட்சா தயாரிக்க கற்றுக்கொடுக்கும் 2 வயது சிறுமி

பீட்சா தயாரிக்க கற்றுக்கொடுக்கும் 2 வயது சிறுமி

webteam

அமெரிக்காவைச் சேர்ந்த 2 வயது சிறுமி ஒருவர் பீட்சா தயாரிப்பது எப்படி என கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

எலிசா சாங் (ELISA CHANG) என்ற குழந்தை பீட்சா எப்படி தயாரிப்பது குறித்த செயல்முறை விளக்கம் தரும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை  பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களில் எலிசாவின் பெற்றோர் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சியை பார்த்தவர்கள் விரைவில் எலிசா சொந்தமாக சமையல் பயிற்சி வகுப்பை தொடங்கலாம் என கமெண்ட் அடித்துள்ளனர். 2 வயது சிறுமியான எலிசாவுக்கு மைக்ரோடிகா எனப்படும் காது வளர்ச்சி குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு இருப்பதை தவிர்த்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எலிசாவின் பெற்றோர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர்.