உலகம்

சகோதரனை காப்பாற்றும் 2 வயது சிறுவன்

சகோதரனை காப்பாற்றும் 2 வயது சிறுவன்

webteam

2 வயது சிறுவன், தன்னுடைய சகோதரனை மீட்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவின் உதஹ் மாகாணத்தில் வீட்டில் இரட்டையர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கிருக்கும், உடைகளை அடுக்கி வைக்கும் மர அலமாரியில் இருவரும் ஏற முயற்சிக்கின்றனர். அப்போது மர அலமாரி கீழே விழ, ஒரு சிறுவன் அதன் அடியில் சிக்கி கொள்கிறான். இதனைக் கண்ட மற்றொரு சிறுவன், மர அலமாரியை தூக்கி தனது சகோதரனை காப்பாற்றுகிறான்.இந்தக் காட்சி அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கண்ட அந்தச் சிறுவர்களின் தந்தை இந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.