உலகம்

அமெரிக்க ராணுவ வீரரைக் கொன்றார்களா நேவி சீல் வீரர்கள்?

அமெரிக்க ராணுவ வீரரைக் கொன்றார்களா நேவி சீல் வீரர்கள்?

webteam

அமெரிக்காவின் நேவி சீல் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மாலி நாட்டில் அமெரிக்க ராணுவ வீரரைக் கொன்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் மாலியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மெல்கர் என்ற ராணுவ வீரர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். இதில் நேவி சீல் படைப் பிரிவுக்குத் தொடர்பு இருக்கலாம் என நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதைத் தொடர்ந்து நேவி சீல் படைப் பிரிவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாலியில் பயங்கரவாதத்துக்கு எதிரான சண்டையில் உதவுவதற்காக அங்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.