உலகம்

ஜன்னலில் சிக்கிய சிறுமி மீட்பு (வீடியோ)

ஜன்னலில் சிக்கிய சிறுமி மீட்பு (வீடியோ)

webteam

சீனாவில் 4 ஆவது மாடி ஜன்னலில் சிக்கிய சிறுமியை இருவர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 4 ஆவது தளத்தில் இருக்கும் வீட்டின் ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி கதறும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த இரண்டு பேர் அருகில் இருந்து குடியிருப்பின் மீது ஏறி ஜன்னல் அருகே சென்று கம்பியை அறுத்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். சுமார் அரைமணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டார். சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மீட்ட இருவரையும் அப்பகுதி மக்கள் சூப்பர் ஹீரோக்கள் என புகழ்ந்துள்ளனர்.