அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
லாஸ்வேகாஸில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நேற்று இரவு நடன, இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த இசை நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அனைவரும் அலறி அடித்து ஓடினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.