வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் செயல்திட்டத்திற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. போலந்தின் கடோவைஸ் நகரில் 2 வாரங்களான நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மாநாட்டின் தலைவர் மைக்கேல் கர்டிகா, யாருக்கும் பின்னடைவை ஏற்படுத்தாத வகையில் ஒப்பந்தந்திற்கான செயல் திட்டம் உருவாகியுள்ளதாக கூறினார். பருவநிலை மாற்ற உடன்பாட்டை ஒருங்கிணைந்து நடைமுறைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய பொறுப்பு என அவர் குறிப்பிட்டார். இந்த உடன்பாட்டின் மூலம் பூமியின் வெப்ப நிலை உயர்வு 2 டிகிரி செல்சியசுக்குள் பராமரிக்கப்படும். 2020 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே கரியமில வாயு வெளியேறும் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை அடைய போலந்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 200 நாடுகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புகை மாசு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவு குறைத்து, அதன் மூலம் பூவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த மாநாட்டில் சர்வதேச நாடுகள் மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை போலந்தின் கடோவைஸ் நகரில் 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நாடுகளுக்கிடையே நிலவிய மாறுப்பட்ட கருத்தால் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒப்பந்தத்திற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.