உலகம்

நைஜீரிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 19 இந்தியர்கள் விடுவிப்பு

webteam

ஆப்பிரிக்க கடற்பகுதி அருகே கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் 19 பேர் நைஜீரிய கடற்பகுதியில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ‘எம்.வி ட்யூக்’ கப்பலில் சென்ற 20 இந்திய மாலுமிகளை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் ஆப்பிரிக்க கடற்பகுதிக்கு அருகே சிறைபிடித்தனர். கடந்த ஒரு மாத காலமாக 20 இந்தியர்களையும் அவர்கள் சிறை வைத்திருந்த நிலையில், ஒரு இந்தியர் உயிரிழந்தார். இதற்கிடையே இந்திய வெளியுறவுத்துறை சார்பில் நைஜீரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று நைஜீரிய கடற்பகுதியில் 19 இந்தியர்களையும் கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். அவர்களை அழைத்துச்சென்ற நைஜீரிய கடற்படை, உரிய சிகிச்சை அளித்து வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு இந்தியர் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், மற்றவர்கள் விரைவில் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறது.