உலகம்

காபூலில் மருத்துவமனை அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு - 19 பேர் உயிரிழப்பு

காபூலில் மருத்துவமனை அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு - 19 பேர் உயிரிழப்பு

Sinekadhara

ஆப்கான் தலைநகர் காபூலில் மருத்துவமனை அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர்.

முதலில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும் பின்னர் துப்பாக்கிச்சூடு நடக்கும் சத்தம் கேட்டதாகவும், அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். ராணுவ மருத்துவமனையில் நுழைவாயில் மற்றும் மருத்துவமனைக்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக தலிபான்கள் கூறியுள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நிகழ்த்தியது யார்? எதற்காக என்பது இன்னும் தெரியவில்லை.