உலகம்

மூடுபனியால் திணறிய வாகன ஓட்டிகள்.. விபத்தில் சிக்கிய 17 பேர் பலி.. சீனாவில் பரிதாபம்!

மூடுபனியால் திணறிய வாகன ஓட்டிகள்.. விபத்தில் சிக்கிய 17 பேர் பலி.. சீனாவில் பரிதாபம்!

webteam

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று  நள்ளிரவு 1 மணியளவில் இவ்விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது

மூடுபனி காரணமாக பார்க்கும் திறன் குறைவாக உள்ளது என்றும் இது போக்குவரத்து விபத்துகளை எளிதில் ஏற்படுத்தும் எனவும் எனவே அப்பகுதியில் செல்லும் வாகனங்களை கவனமாக இயக்குமாறு   நஞ்சாங் மாவட்டப் போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வாகனத்தை இயக்கும்போது கவனம் செலுத்தவும், முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லவும், வேகத்தை குறைக்கவும், முன்னாள் செல்லும் வாகனத்தை பாதுகாப்பான இடைவெளியை பின்தொடரவும், வாகனத்தை முந்திச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சீனாவில் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததால் சாலை விபத்துகள் அடிக்கடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது