மியான்மர்
மியான்மர் முகநூல்
உலகம்

பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தாக்கப்பட்ட சம்பவம்! கீழே விழுந்து எரிந்ததால் பரபரப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

கிழக்கு மியான்மரில் இருந்து தாய்லாந்திற்கு சுமார் 1300 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்ப்பு போராளிகள் மற்றும் சிறுபான்மை இனக் கிளர்ச்சியாளர்கள் இணைந்து, ஏப்ரல்11ஆம் தேதி வர்த்தக நகரத்தை கைப்பற்றினர். ராணுவத்துக்கு பெரும் அடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மியான்மரில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தாக்கப்பட்டதில், கீழே விழுந்து எரிந்தது. தாய்லாந்து எல்லையில் நடந்த நிகழ்வில், பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென கட்டடங்களுக்கு பின்புறம் விழுந்தது எரிந்தது.

தீப்பிழம்புகளுடன், பெரும் கரும்புகையும் கிளம்பியது. அந்தப் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்து ஏற்கனவே இடம்பெயர்ந்துவிட்டதாக, தாய்லாந்து நாடு கூறியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த மோதலானது மியாவாடி நகரம், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து எல்லையை ஒட்டிய பகுதியில் அரங்கேறியுள்ளது.

ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்குமான இந்த மோதலின் காரணமாக அங்கு பதற்றம் நிலவிவருகிறது. இதனால், சுமார் 1300 க்கும் மேற்பட்ட மக்கள் தாய்லாந்தினை நோக்கி தஞ்சம் அடைந்துள்ளனர்.