உலகம்

ஃப்ளைட் ரத்தானதும் road trip சென்ற 13 பேர்: அதுவும் யாருனே தெரியாதவர்களுடன்.. ஏன்? எதற்கு?

JananiGovindhan

ஆசைப்பட்டு ஒரு இடத்துக்கு போவதற்காக மெனக்கெட்டு எல்லாம் தயார் செய்து காத்திருக்கும் போது அந்த ப்ளான் மொத்தமாக ரத்தானால் எப்படி இருந்திருக்கும்? அதுவும் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கொண்டு ட்ரெயின் அல்லது ஃப்ளைட் ஏற செல்லும் நேரத்தில் திடீரென பயணம் ரத்தாவதெல்லாம் கனவில் கூட நடக்காது என தோன்ற வைக்கும். அப்படியான ஒரு சோக நிகழ்வுதான் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த வெவ்வேறு 13 பேருக்கு நடந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதனை எப்படி சாமர்த்தியமாக மாற்றி அமைத்தார்கள் என்பதே சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாத அந்த 13 பேரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு போக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் விமானம் ரத்தானதால் அதிர்ச்சிடையைந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் ஒரு மினிவேனை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் road trip ஆக சென்று தங்களது ஊரை அடைய முடிவெடுத்து செயல்படுத்தியிருக்கிறார்கள்.

இது விமானத்தில் செல்வதை காட்டிலும் அவர்களது வாழ்நாளுக்குமான சாகச பயணமாக இருந்திருக்கும். அந்த கும்பலில் இருந்தவர்கள் தங்களோடு மட்டும் அந்த ட்ரிப்பை அனுபவிக்காமல் தங்களுடைய டிக்டாக் ஃபாலோயர்ஸ்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான CNN Travel வெளியிட்டுள்ள செய்தியில், The Farm Babe என்ற பெயரில் இன்டென்நெட் இன்ஃப்ளூயன்சராக இருக்கும் மைக்கேல் மில்லருக்கு வரும் செவ்வாயன்று நாக்ஸ்வில்லில் நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்தார்.

கார்லோஸ் கார்டெரோ மற்றும் லாரா புக்கரிங் தங்களது 17 வயது மிகைலாவுடன் டென்னசி பல்கலைக்கழகத்திற்கு செல்லவிருந்தார். அதேபோல, இன்னொருவர் விசாரணைக்காகவும், மற்றொருவர் மெக்சிகோவில் உள்ள நண்பருக்கு உதவி செய்வதற்காகவும் இருந்த இந்த 13 பேரும்தான் விமானம் ரத்தானதும் மினி வேனை வாடகைக்கு எடுத்து அனைவரும் ஒன்றிணைந்து சென்றிருக்கிறார்கள்.

இந்த மினிவேன் ஐடியாவை எமியுடையது. அவர் இந்த யோசனையை சொன்னதும் மற்றவர்கள் அதனை செயல்படுத்திவிட்டார்கள் என்று மைக்கேல் கூறியிருக்கிறார். அதேபோல, கார்லஸ் கூறுகையில், அவர் பொதுவாக இதுபோன்ற எதையும் செய்யமாட்டார் என்று லாராவை குறிப்பிட்டதோடு, மகள் மிகைலாவுக்கு இதில் முழு உடன்பாடு இல்லாமலே இருந்தார்.

“அவர்கள் முதலில் என்னிடம் சொன்னபோது நான் அவர்களை பைத்தியம் போல் பார்த்தேன். இந்தப் பெரிய வேனில் பலவிதமான அந்நியர்களுடன் ஏற விரும்புகிறீர்களா?” என்பது போல இருந்தது என்றுக் கூறியிருக்கிறார். இந்த நிலையில், மினி வேனை வாடகைக்கு எடுத்து அதில் பயணிக்க தொடங்கியபோது அந்த குழுவில் இருந்த கல்லூரி மாணவியான அலானா தன்னுடைய டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டு வந்தார்.

இதனையடுத்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழிகளில் சாலைப் பயணத்தை சீராகச் செய்ய உதவ முன்வந்தனர். ஒருகட்டத்தில் எல்லோரும் ஒன்றாக பயணிக்கும் சொந்தங்களாகவே தங்களை எண்ணிக் கொண்டனர். பல மணிநேர சாலை வழி பயணத்துக்கு பிறகு ஒவ்வொருவரும் தங்களுக்கான இடத்தை அடைந்தனர். இது சோர்வான பயணமாக இருந்தாலும், வாழ்நாளில் மறக்கவே முடியாத அனுபவங்களை இந்த ட்ரிப் கொடுத்திருப்பதோடு, நட்புறவுகளையும் வளர்த்திருக்கிறார்கள்.