உலகம்

அனிமேஷன் ஸ்டூடியோவில் பயங்கர தீ: 13 பேர் பலி, 36 பேர் படுகாயம்!

அனிமேஷன் ஸ்டூடியோவில் பயங்கர தீ: 13 பேர் பலி, 36 பேர் படுகாயம்!

webteam

ஜப்பானில், அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 உயிரிழந்துள்ளனர். 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் உள்ள கியோட்டோ நகரில், ’கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புகழ்பெற்ற பல அனிமேஷன் படங்கள் இங்கு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு ஏராளமானோர் பணியாற்றி வரு கின்றனர்.

இங்கு இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 36 பேர் படுகாயமடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த 48 தீயணைப்பு வண்டிகள், தீயை போராடி அணைத்தன.  

ஸ்டூடியோவில் எரிபொருள் போன்ற திரவத்தை ஒருவர் ஊற்றியதாகவும் அதனால்தான் தீவிபத்து ஏறபட்டதாகவும் அவரும் விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தீவிபத்து ஏற்பட்டபோது பயங்கர சத்தம் கேட்டதாகவும் கடும் புகை எழுந்ததாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித் துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.