ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியில் 24 வயது இந்திய தாத்தா, திடீரென பிரபலமாகியுள்ளார்.
அபுதாபி, சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒருவரின் பாஸ்போர்ட்டை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அவரது பிறந்த தேதி ஆகஸ்ட் 8, 1896 என்று இருந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்ற அவரது இப்போதைய வயது 124.
இவ்வளவு வயதான முதியவரா? என்று வியந்த அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அவர் வைத்திருந்த அனைத்து ஆவணங்களிலும் இதே பிறந்த தேதிதான் இருந்தது. ஒரு பக்கம் சந்தேகம் இருந்தாலும், நூறு வயதை தாண்டியவர் என்பதால் அவருடன் விமான நிலைய ஊழியர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதை சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிட, இந்த இந்தியன் தாத்தா, பிரபலமானார் அங்கு.
சிலர், அவரது வயது 80-90-க்குள் தான் இருக்கும் என்றும் அவரது தோற்றம் அப்படித்தான் தெரிகிறது என்றும் கருத்து தெரி வித்திருந்தனர்.
’இந்த வயது உண்மையாக இருக்காது. அந்த காலத்தில் சரியான ஆவணங்கள் இல்லாமல் பாஸ்போர்ட் எடுத்திருப்பார்கள். அதனால் பிறந்த தேதியை பெற்றோர்களே தவறாகக் கொடுத்திருக்கலாம்’ என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
உலகின் வயது முதிர்ந்த பெண்ணின் வயது 116-தான். ஜப்பானைச் சேர்ந்த தனகா என்ற அந்தப் பெண்ணின் பிறந்த தேதி, ஜனவரி 2, 1903 ஆம் ஆண்டு என்கிறது இணையம்.