உலகம்

சிறுமியின் கழுத்தில் காலை வைத்த காவலரின் வீடியோ! மீண்டும் ஒரு ஜார்ஜ் ப்ளாய்ட் சம்பவமா?

webteam

அமெரிக்காவில் ஜார்க் ப்ளாய்ட் சம்பவத்தை போல 12 வயது சிறுமியின் கழுத்தில் காவலர் ஒருவர் காலை வைத்து மிதிக்கும் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உணவருந்தும் கூடத்தில் மாணவிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைக் கவனித்த காவலர் ஷான் குவெட்ஷோ அந்த சண்டைக்குள் தலையிட்டதாக கூறப்படுகிறது. திடீரென 12 வயது நிரம்பிய மாணவியை அவர் தாக்கத் துவங்கியுள்ளார். அவரை தரையில் தள்ளி தலையில் கால் வைத்து மிதித்து தாக்கியுள்ளார். பள்ளியில் இருந்த மற்ற காவலர்கள் மாணவியிடம் இருந்து அவரை பிரிக்க முயற்சித்தபோதும், தொடர்ந்து மாணவியை தாக்கியுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின் அவரை மற்ற காவலர்கள் போராடி அந்த இடத்தைவிட்டு வெளியேற்றினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்பொது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒரு ஜார்ஜ் ப்ளாய்ட் சம்பவமா? என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "நாங்கள் எங்கள் விசாரணையைத் தொடர்கிறோம், சம்பவத்தின் முழு நோக்கத்தையும் கவனமாகக் கவனித்து வருகிறோம்" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.