உக்ரைன் - ரஷ்யா போர் புதிய தலைமுறை
உலகம்

உக்ரைன் - ரஷ்யா போர்: உயிரிழந்த இந்தியர்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கொடுத்த தகவல்!

உக்ரைன் - ரஷ்யா போரில் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 96 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

PT WEB

உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்காக சண்டையிட்டு, இதுவரை 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 126 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்து, உக்ரைனுடனான போரில் பங்கேற்றதாக தெரிவித்தார்.

இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 96 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மீதமுள்ள 18 பேரில், 16 பேர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என கூறிய ரந்தீர் ஜெய்ஸ்வால், அவர்களை ரஷ்யா ராணுவம் காணவில்லை என அறிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், ரஷ்ய ராணுவத்திலுள்ள இந்தியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென, ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.