வங்கதேச வன்முறையில் 7 மாதங்களில் 116 சிறுபான்மையினர் பலி web
உலகம்

வங்கதேசம்: 7 மாதங்களில் 116 சிறுபான்மையினர் பலி.. சர்வதேச நாடுகள் தலையிட கோரிக்கை!

வங்கதேசத்தில் இதுவரை 116 சிறுபான்மையினர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

PT WEB

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7 மாதங்களில் மட்டும் 116 சிறுபான்மையின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கட்டாய மதமாற்றம் உள்ளிட்டவையும் அதிகரித்துள்ளன.

வங்கதேசம் வன்முறை

இதனால் வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.