உலகம்

ஜப்பான் அருகே மூழ்கியது கப்பல்: தமிழர்கள் உட்பட 15 பேர் மீட்பு, 11 பேர் மாயம்!

webteam

ஜப்பானின் ஒக்கினாவா தீவு அருகே சரக்கு ஒன்று கப்பல் ஒன்று மூழ்கியதில் தமிழக இன்ஜினீயர்கள் உட்பட 15 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 11 பேரை காணவில்லை.

ஹாங்காங் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கடல் பகுதியில் நேற்று பயணித்துக்கொண்டிருந்தது. இதில் தமிழக இன்ஜீனியர்கள் உட்பட 26 பேர் இருந்தனர். அனைவரும் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது பலத்த புயல் காற்று வீசியது. அதில் சிக்கிய  கப்பல் கடலில் கவிழ்ந்து, மூழ்கியது. இதில் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து, ஜப்பான் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் தமிழர்கள் உட்பட 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 11 பேரை காணவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெறுகிறது. கடலில் புயலின் சீற்றம் குறையாததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெளியுறத்துறை செயலாளர் ரவீஷ் குமார் மீட்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார். அதில், இன்ஜினீயர்கள் சுரேஷ் குமார், கருப்பையா ரங்கசாமி, சுபாஷ் லூர்துசாமி, முகமது இர்பான், சமையல்காரர் கார்த்திகேயன் உட்பட 15 பேரின் பெய்ர்கள் இடம்பெற்றுள்ளன.