இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
இந்திய பகுதிகளான லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருதரப்பு ராணுவத்துக்கு மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவத்தினர் 20 பேரும், சீனா ராணுவத்தினர் 35 பேரும் உயிரிழந்தனர். எல்லைப் பகுதியில் அமைதியும், சமாதானத்தையும் மீண்டும் ஏற்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே தளபதிகள் மட்டத்திலான 10-ஆவது சுற்று பேச்சுவார்த்தை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. மோல்டோ என்ற இடத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், பாங்கங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து படைகளை இரு தரப்பினரும் திரும்ப பெறுவது, மோதல் ஏற்படும் வகையிலான பிற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.