அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். அங்கு அரசு மேற்கொண்ட பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகளால் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிவருகின்றனர்.
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு நிர்வாகத்தால் ஷார்ஜாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. பல துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் தன்னலமற்ற சேவை மற்றும் உழைப்பால் நெருக்கடி நிலையில் இருந்து அனைவரும் மீண்டுள்ளதாகவும் அவர்களுடைய பணியை அங்கீகரிப்பதாகவும் மனிதவள இயக்குநரகத் தலைவர் டாக்டர் தாரிக் சுல்தான் பின் காதம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அலுவலகம் திரும்பியுள்ள அரசு ஊழியர்களுக்கு சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.