உலகம்

சீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்!

சீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்!

webteam

லண்டனில் டர்பன் அணிந்திருந்ததால், 10 வயது மாணவியை பயங்கரவாதி என கூறி, அவளுடன் விளையாட மறுத்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு லண்டனில் உள்ளது பிளம்ஸ்டட் நகரம். இங்கு வசிக்கும் சீக்கியர் குர்பிரீத் சிங். இவரது மகள் முன்ஷிமர் கவுர். வயது 10. சிங், தனது சமூக வலைத்தளத்தில் முன்ஷிமர் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘இது என் மூத்த மகளின் உண்மை கதை. இன்று என் மகளுக்கு நடந்திருக்கிறது. நாளை உங்கள் மகள்களுக்கும் நடக்கலாம்’’ என தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் 10 வயது சிறுமி முஷிமர் கவுர் அங்குள்ள பூங்காவில் தனக்கு நேர்ந்த இனவெறி கொடுமையை சொல் கிறார்.

அதில், ‘’ கடந்த திங்கட்கிழமை, நான்கு பேர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நானும் விளையாட வரலாமா? என்று கேட்டேன். அவர்கள் சத்தமாக, ’நீ எங்களுடன் விளையாட முடியாது. ஏனென்றால் நீ பயங்கரவாதி’ என்றனர். இதைக் கேட்டு உடைந்துவிட்டேன். பின்னர் என் தலையை நிமிர்த்தி அங்கிருந்து சென்றுவிட்டேன்.

மறுநாள் அதே இடத்துக்குச் சென்றேன். அங்கு ஒன்பது வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். நானும் அவளுடன் விளையாட முயன்றேன். அப்போது அந்தச் சிறுமியின் அம்மா, ’நீ ஆபத்தானவளாக இருப்பதால் உன்னுடன் என் மகள் விளை யாட மாட்டாள்’ என்றார். இந்த இனவெறி பற்றி என் பெற்றோரிடம் தெரிவித்தேன். சீக்கியர்கள் டர்பன் அணிந்திருப்பது பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. நாங்கள் எல்லோரையும் நேசிக்கிறோம். இதுபோன்று யாருக்கும் நடந்தால் பெற்றோரிடம் தெரிவியுங்கள்’’ என்று கூறியுள்ளார்.