உலகம்

தலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி: இதயங்களை வென்ற நர்வால்

தலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி: இதயங்களை வென்ற நர்வால்

webteam

அமெரிக்காவில் நாய்க்குட்டி ஒன்றுக்கு தலையில் வால்முளைத்துள்ளது. தலையில் ஒரு வாலுடன் நாய்க்குட்டி செய்யும் சேட்டையை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் பலரின் செல்ல நாய்க்குட்டியாக மாறியுள்ளது நர்வால். அமெரிக்காவின் மேக்ஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்து நர்வால் என்று பெயரிட்டு வளர்த்து வந்தது. பிறந்து 10 வாரங்கள் ஆன நர்வால் மற்ற நாய்க்குட்டியைப் போல இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது.

அதன் நெற்றியில் ஒரு வால் முளைத்து இருந்தது. நர்வால் செய்யும் சேட்டைகளை மேக்ஸ் மிஷன் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், நர்வாலுக்கு தலையில் வால் இருப்பது வித்தியாசம் தான் என்றாலும், இதனால் அந்த நாய்க்குட்டி பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்

தலையில் ஒரு வாலுடன் சுட்டித்தனம் செய்யும் நர்வாலுக்கு இணையத்தில் பல ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். நர்வாலின் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.