உலகம்

ஒன்று மட்டுமல்ல இரண்டு, மூன்று தலைநகரங்கள்: இதோ அந்த உலக நாடுகள்

ஒன்று மட்டுமல்ல இரண்டு, மூன்று தலைநகரங்கள்: இதோ அந்த உலக நாடுகள்

webteam

பள்ளி நாட்களில் நாடுகளின் தலைநகரங்களை நினைவில் வைத்திருப்பது மாணவர்களுக்கு மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். ஒரு தலைநகரம் மட்டுமல்ல, இரண்டு மூன்று தலைநகரங்கள் உள்ள நாடுகளும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அதுவும் பத்து நாடுகள்.

இலங்கை
கொழும்பு - வணிகத் தலைநகர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா கோட்டே - நாடாளுமன்றத் தலைநகர்

தென் ஆப்பிரிக்கா
மூன்று தலைநகரங்கள். கேப் டவுன் - நாடாளுமன்ற தலைநகர். ப்ளோம்பான்டைன் - நீதித்துறை தலைநகர், பிரிட்டோரியா - நிர்வாகத் தலைநகர்

மலேசியா
கோலாலம்பூர் - தேசிய தலைநகர், புத்ரஜெயா - கூட்டாட்சித் தலைநகர்

நெதர்லாந்து
ஆம்ஸ்டர்டாம் - தேசிய தலைநகர், ஹேகூ - முடியாட்சியின் குடியிருப்புத் தலைநகர்

மாண்டிநீக்ரோ
போட்கோரிக்கா - அரசு நிர்வாகத் தலைநகர், செடிஞ்சே - பழைமைமிகு தலைநகர்

பொலிவியா
லா பாஷ் - நிர்வாகத் தலைநகர், சுக்ரே - நாடாளுமன்ற மற்றும் நீதித்துறை தலைநகர்

ஸ்வாசிலேண்ட்
எம்பாப்னே - நிர்வாகத் தலைநகர், லோபாமா - அரச மற்றும் நாடாளுமன்றத் தலைநகர்

சிலி
சாண்டியாகோ - அரசுத் தலைநகர், வால்பரைசோ - நாடாளுமன்றத் தலைநகர்

பெனின்
போர்ட்டோ நோவா - அரசுத் தலைநகர், கோட்டோநோவ் - நீதித்துறை தலைநகர்

ஜார்ஜியா
டிப்லிசி - அரசுத் தலைநகர், குட்டாய்சி - நாடாளுமன்றத் தலைநகர்

புகைப்படங்கள் நன்றி: இந்தியாடைம்ஸ் இணையதளம்