உலகம்

பனிச்சறுக்கு விளையாட்டில் 1,884 பேர் பலி..!

பனிச்சறுக்கு விளையாட்டில் 1,884 பேர் பலி..!

webteam

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,884 என அந்நாட்டு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டின் போதி பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சுவிட்சர்லாந்து முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த இது போன்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கடந்த 1936-ம் ஆண்டு முதல் சுவிஸ் பப்ளிக் தொலைக்காட்சி பதிவு செய்து வருகிறது.

அண்மையில் அது வெளியிட்டுள்ள புள்ளி விபரம் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,884 என தெரிவித்துள்ளது.