கனடாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வரும் சூழலில், தற்போது காட்டுத் தீயால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லிட்டனில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை பதிவாகியிருந்தது. இந்தச் சூழலில், வறண்ட வானிலை காரணமாக அங்குள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதி அருகே இருந்த கிராமங்களில் 90 சதவிகிதம் அளவுக்கு வீடுகள் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயால் அருகில் உள்ள நீர் மின் நிலையங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே சுட்டெரிக்கும் வெயிலுக்கு கடந்த 5 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.