உலகம்

”ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது" - ஐநா பாதுகாப்பு சபை தீர்மானம்

Veeramani

எந்த நாட்டையும் தாக்குவதற்கோ, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கவோ, அவர்களுக்கு பயிற்சி அளிக்கவோ ஆப்கானிஸ்தான் நாடு பயன்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய விரும்பும் ஆப்கானியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என நம்புவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் உரிமை, இந்துகள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாப்பும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. நிரந்தர உறுப்பினர்களாக ரஷ்யாவும், சீனாவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐநா பாதுகாப்பு சபைக்கு இந்தியா தலைமையேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.