இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றம் ட்ரம்ப் நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான தேசிய பாதுகாப்பு அதிகாரமளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த மசோதா அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்புத்துறையில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு பாதுகாப்பு சார்ந்த நலன்களை பேணி காக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறையின் முக்கிய கூட்டாளி என்ற அந்தஸ்தை, இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியது. அந்த அந்தஸ்தை நடைமுறையிலும் நிறைவேற்ற வேண்டும் என்கிறது இந்த மசோதா.