உலகம்

நான் சிரியாவுக்கு வந்தது தவறு : ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி

நான் சிரியாவுக்கு வந்தது தவறு : ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி

webteam

ஐஎஸ். அமைப்பில் சேர்ந்த லண்டன் மாணவி, தனது குழந்தைகளையும் தோழிகளையும் இழந்துவிட்டேன் என்றும் லண்டனில் உள்ள வீட்டுக்குப் போக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவிகள் அங்கிருந்து தப்பி, சிரியா சென்று ஐஎஸ் பயங் கரவாத அமைப்பில் சேர்ந்தனர். அதில், 15 வயதான ஷமிமா பேகமும், கடிஜா சுல்தானாவும் பங்களாதேஷைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மற்ற மாணவி பெயர் அமிரா அபாஸ். இவர்கள் லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் அகாடாமியில் படித்து வந்தனர். ஒரு நாள், ’வெளியே சென்று வருகிறோம்’ என்று வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர்கள், பிறகு சிரியாவுக்குத் தப்பி ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தனர். அப்போது இந்த செய்தி லண்டனில் பரபரப்பானது.

சிரியாவின் அகதி முகாமில் இருக்கும் ஷமிமா பேகம், தான் நாடு திரும்ப வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண்குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்காகவாவது லண்டன் திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், பிரிட்டிஷ் அரசு, ஷமிமா பேகத்தின் குடியுரிமையை ரத்து செய்துவிட்டது. இந்நிலையில், சிரியாவின் ரோஜ் முகாமில் இருக்கும் அவரை, இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ’டெய்லி மிர்ரர்’ பத்திரிகையின் செய்தியாளர் சந்தித்து பேட்டி எடுத்துள்ளார். 

ஐஎஸ்.அமைப்புக்கு மற்றப் பெண்களை இழுக்கும் வேலை ஷமிமாவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. தற்கொலை படையின ருக்கு வெடிகுண்டுகள் கொண்ட உடையை, வெடிக்கும் முன் கழற்றிவிடாதபடி சரியாக மாட்டும் வேலையும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. கையில் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் அவர் இந்த வேலைகளை செய்து வந்துள்ளார். இப்போது ஆளே மாறியிருக்கும் ஷமிமா, புதிதாக மூக்கு குத்தியிருக்கிறார். கருப்பு உடை அணியால் பளிச்சென்று இருக்கிறார். 

’’எனக்கு இப்போது இங்கு தோழிகள் யாருமில்லை. என்னுடன் வந்த உண்மையான தோழிகளை இழந்துவிட்டேன். எனக்கு இப்போது யாரும் இல்லை. எனது உடல் நிலை சரியாக இருக்கிறது. மனநிலை சரியில்லை. நான் என் குழந்தைகளை இழந்து விட்டேன்.

அப்போது, நான் ஐஎஸ் அமைப்பை ஆதரித்து பேசியது உண்மைதான். இல்லை என்றால் அவர்கள் என்னையும் என் குழந்தை யையும் கொன்றுவிடுவார்கள் என்று பயந்ததால் பேசினேன். நான் சிரியாவுக்கு வந்தது தவறு. இதைவிட நான் பிரிட்டனில் பாதுகாப்பாக இருப்பேன். நான் அங்கு வரவே விரும்புகிறேன். என்னை விசாரித்து அங்கு தண்டனை கொடுங்கள். ஏற்கனவே இங்கு தண்டனையை அனுபவித்து வருகிறேன். இங்கு எப்போது என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது. என் பெற்றோ ருக்கு போன் செய்தேன். அவர்கள் எடுக்கவில்லை. மெசேஜ் அனுப்பினால் பதில் இல்லை. அவர்கள் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.