உலகம்

"காற்று மாசு... இந்தியா மோசம்" - நேருக்கு நேர் விவாதத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப்!

webteam

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று, குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய டிரம்ப், "இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் காற்றின் மாசு மிக மோசமான நிலையில் உள்ளது" என பருவநிலை மாற்றம் குறித்து சுட்டிக்காட்டினார்.

பின்னர், "எனக்கு இனவெறி எண்ணம் மிகக்குறைவு" என்று குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்ப். முதல்கட்ட விவாதத்தில் பேசிய அவர், வெள்ளை மேலாதிக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டார். ட்ரம்பின் இனவெறி தொடர்பான கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பலரும் ட்ரம்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்