உலகம்

நட்சத்திர பாடகரின் படப்பிடிப்பில் வன்முறை

நட்சத்திர பாடகரின் படப்பிடிப்பில் வன்முறை

webteam

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் இசை ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டது.

பெல்ஜியம் நாட்டின் நட்சத்திர பாடகர் வர்காஸ் இசை வீடியோவை பொது இடத்தில் வைத்து படம் பிடிக்கப் போவதாகவும், அப்போது தன்னை ரசிகர்கள் வந்து காணலாம் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட இடத்துக்கு ஏராளமான ரசிகர்கள் சென்றபோது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.