ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட விஷயம் இணையதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் விஷயம் ‘ஃபேஸ் ஆப்’.
சில வருடங்களுக்கு முன்பு கொரியன் மொபைல் போன்களில் ஆண் குரலை பெண் குரலாக மாற்றும் விஷயம் பரபரப்பானது. தற்போது வந்துள்ள பேஸ் ஆப் நம் முகங்களைப் பல கோணங்களில் மாற்றி பிரபலமடைந்திருக்கிறது.
’ஃபேஸ் ஆப்’ என்னும் அப்ளிகேஷனின் மூலம் ஆண் முகத்தைப் பெண் முகமாகவும் பெண் முகத்தை ஆண் முகமாகவும் மாற்றலாம். நீங்கள் வயதானால் எப்படி இருப்பீர்கள் என்றும் மாற்றிப் பார்க்கலாம். இளைஞராக இருக்கும் உங்கள் முகத்தைக் குழந்தை முகமாகவும் மாற்றிப் பார்க்கலாம். இந்த ஆப் இப்போது பிரபலமாகி ஃபேஸ்புக் அன்பர்கள் தங்களது முகங்களைப் பலவிதமாக மாற்றி தங்களது பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.