உலகம்

“இனவாதம் நடந்தால் கண்களை மூடிக்கொள்ள முடியாது” - போப் ஃப்ரான்சிஸ்

webteam

இனவாதத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவோ அல்லது கண்களை மூடிக்கொள்ளவோ முடியாது என போப் ஃப்ரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அத்துடன் உயிரிழந்தார். இதனால் அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் மீண்டும் இனவாதம் தலைதூக்கிவிட்டதாக மக்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். ஜார்ஜ் ஃப்ளையாட் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்குக் கிறிஸ்துவ மதத் தலைவர் ஃபோப் ஃபாரன்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் அமெரிக்காவின் சுய அழிவு மற்றும் சுய தோல்வி என வருத்தம் தெரிவித்துள்ளார். ஜார்ஜ் ஃப்ளையாட் மரணம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனவாதத்தைக் கடந்து செல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

அத்துடன் மனிதத்தைக் காப்பதற்காக, இனவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதைத் தடுக்க வேண்டும் என்றும், கண்களை மூடிக்கொண்டு இனவாதத்தைக் கடந்து செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் அமெரிக்கர்கள் வன்முறையால் எதைப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், வன்முறை இழப்பை மட்டுமே தரும் எனவும் கூறியுள்ளார். எனவே தேச அமைதி மற்றும் ஒருமைப்பாடு கருதி போராட்டக்காரர்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.